சிவகங்கையில், கழிவுகளை உரமாக்கும் திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மானாமதுரையில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : தேவை ஏற்பட்டால் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - செந்தில் பாலாஜி!
இதற்கு பதிலளித்த அமைச்சர், கே.என். நேரு, ஏற்கனவே கசடு மேலாண்மை திட்டத்தின் மூலம், கழிவுகளை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இந்த ஆண்டுக்குள் மாவட்டம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பதிலளித்தார்.