தமிழ்நாடு

கோவில் யானைக்கு குளியல் தொட்டி...! பரவசத்தில் துள்ளிக்குதித்த பார்வதி....!

Malaimurasu Seithigal TV

 உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள யானையின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் ரூபாய் 23லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட குளியல் தொட்டி  அமைக்கப்பட்டது. அதனை  நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
நீச்சல் குளத்தில் இறக்கி விடப்பட்ட யானை, தண்ணீரைக் கண்டதும் உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி விளையாடியது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதற்காக கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு சிறப்பு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. 

இதனால் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக குளித்து மகிழ்ந்து விளையாடும் வகையில் 23.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட குளியல் தொட்டி அமைக்கப்பட்டது. 

அதனை நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்து கோவில் யானை பார்வதியை நீச்சல் குளத்தில் இறக்கி விடப்பட்டது.தண்ணீரைக் கண்டதும் உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி மகிழ்ந்து குளித்து வந்தது அனைவரையும் கவர்ந்தது அதனை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என அனைவரும் கண்டு ரசித்தனர்.