தமிழ்நாடு

இதுவும் பொய்யாக இருந்தால்... மாபெரும் போராட்டத்தை கையில் எடுப்போம்...!!

Malaimurasu Seithigal TV

திமுக தேர்தல் வாக்குறுதி போல் அமைச்சர் பொன்முடி கொடுத்த வாக்குறுதியும் பொய்யாக இருந்தால் தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டத்தை கையில் எடுப்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நல சங்கம் சார்பில் தொடர்ந்து ஐந்து நாட்களாக நடத்தி வந்த போராட்டம் உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்த சிறிது நேரத்திற்கு பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்

அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், பணி நிரந்தரம் வேண்டுமென்று ஆசிரியர்கள் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் இன்று வரை எந்த ஒரு நியாயமும் கிடைக்கவில்லை, என்றும் தற்பொழுதுதான் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வந்து சென்று இருக்கிறார் எனக் கூறிய அவர் கடந்த ஐந்து நாட்களாக ஒரு அதிகாரிகள் கூட இவர்களை கண்டு கொள்ளவில்லை இதுதான் ஜனநாயகத்தின் ஆட்சியா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக கோடை வெயிலில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு  வந்தனர் எனவும் ஒரு வாரம் காலம் காத்திருந்து பார்ப்போம் தேர்தல் வாக்குறுதி போல் இதுவும் பொய்யாக மாறினால் தேமுதிக சார்பாக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறியுள்ளார்.