தமிழ்நாடு

அதையும் மீறி செயல்பட்டார்கள் என்றால் கிரிமினல் வழக்கு தொடுப்போம்... சிஐடியு!!

Malaimurasu Seithigal TV

போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் நியமிக்கப்படுவது தொடர்பாக தொழிலாளர் நல ஆணையரிடம் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில்,மே 5ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும் என சிஐடியு  மாநில செயலாளர் ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு மாநில செயலாளர் ஆறுமுக நயினார் தலைமையிலான குழு தொழிலாளர் நல வாரிய அதிகாரியிடம்  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் சி ஐ டி யு பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், கும்பகோணம் போக்குவரத்து முதுநிலை துணை மேலாளர் கோவிந்த ராஜ், அரசு விரைவு போக்குவரத்து துணை மேலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் தொழிலாளர் தனி இணை ஆணையர் வேல்முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து துறையில் உள்ள 20 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும், தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய விதிகளை தான் பின்பற்றுவதாகவும் பேச்சுவார்த்தையில் கூறியுள்ளனர்.   தொடர்ந்து பேச்சுவார்த்தையானது மே ஐந்தாம் தேதி நடைபெறும் எனவும் அதற்குள் வேலை நிறுத்த போராட்டம் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் டெண்டர் மூலமாக 100 நபர்களில் 10 நபர்களை தான் எடுத்து உள்ளோம் என கூறியுள்ளார்கள் எனத் தெரிவித்த சிஐடியு மாநில செயலாளர் அதையும் மீறி செயல்பட்டார்கள் என்றால் கிரிமினல் வழக்கு தொடுப்போம் எனத் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் 3200 பேருந்துகள் இயக்குவதாக தெரிவித்தாலும் 900 பேருந்துகள் ஓட்டுநர், நடத்துனர் இல்லாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.