தமிழ்நாடு

தமிழகத்திற்கான நீரை பங்கிட்டு தராவிட்டால் கூட்டணி விட்டு வெளியேறு என தமிழக முதல்வர் சொல்ல  வேண்டும்” - சீமான்.

Malaimurasu Seithigal TV

” மக்கள் நலனை பற்றி சிந்திக்காமல்  ஸ்டாலின் மீனவர்கள், விவசாயிகளை சந்திப்பது மற்றும் திமுகவினர் நீட்டுக்கு எதிரான உண்ணாவிரதம்  இவையெல்லாம்  தேர்தலுக்காக தான்”   - நாம்தமிழர் கட்சி சீமான் குற்றச்சாட்டு

திருச்சியில்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-- 

” தமிழகத்திற்கான நீரை பங்கிட்டு தராவிட்டால் கூட்டணி விட்டு வெளியேறு என தமிழக முதல்வர் சொல்ல  வேண்டும், தேர்தலுக்காக தான் தற்போது முதல் விவசாயிகளை, மீனவர்களை சந்திப்பது மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது போன்றவற்றை திமுகவினர் செய்து வருகின்றனர். தேர்தல் வெற்றி பெற்ற பிறகு மக்கள் நலனை பற்றி சிந்திக்காமல் அடுத்த தேர்தலில் பற்றியே சிந்திக்கிறார்கள்.

தமிழர்களைக் கொன்றொழித்த, கச்சத்தீவை தாரைவார்த்த, காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக யாருக்காகதான் ஆட்சி செய்கிறார்கள். கர்நாடகத்தில் தண்ணீர் தங்களுக்கு தேவைக்கு பின்னர் தான் கொடுப்போம் என்கிற பட்சத்தில் தமிழகத்திலும் அவ்வாறு செய்தால் நாட்டில் ஒருமைப்பாடு, இறையாண்மை எவ்வாறு இருக்கும்?”  என கேள்வி  எழுப்பினார்.

தமிழர்களின் பேரன்பை மற்ற மாநில மக்கள் கட்சியினர் இளிச்சவாய் தனமாக கருதக்கூடாது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா ஏதும் செய்யவில்லை. அதற்கு மத்திய அரசும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரவர் அவர்களது மாநில நலனும் கருத்தில் கொள்ளும்போது தமிழக முதல்வரும் நம் மாநில மக்களின் நலனையே கருத வேண்டும்.  இது குறித்து விவசாயிகள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் என்பதால் தான் அவர்களை முதல்வர் சந்திக்கவில்லை”  என்றார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் வந்தாலும் பாஜக வந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டார்கள். அவ்வாறு தண்ணீரை கொடுக்கும் கட்சி அங்கு தோற்கும். மேகதாதுக்கு அணை கட்டுவேன் என்று கூறினால் தான் அங்கு அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள். அவர் இருக்க தமிழர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனால் காங்கிரஸ் கூட இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகிறார்கள்.

2019 தேர்தலில் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறாத பட்சத்தில் பாஜகவே தமிழகத்தில் இல்லை, அவ்வாறு இருக்க திமுக தவிர்த்து மற்றவர்களுக்கு ஓட்டு போட்டால் பாஜக உள்ளே வந்துவிடும் என கூறுவது எவ்வாறு ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

மதுரை அதிமுக மாநாடு முடிந்து 4 நாள் ஆனநிலையில் ஏதாவது மாற்றம் வந்ததா?  தொண்டர்களுக்கு மட்டும்தான் உற்சாகம் ஏற்படுத்த மாநாடு நடைபெற்றது.

எனக்கு தெரிந்த புரட்சி தமிழன் சத்யராஜ் மட்டும் தான்.. பல புரட்சிகளை செய்த சத்யராஜுக்கு அந்த பெயர் பொருந்தும் ஆனால் தற்போது அந்த புரட்சி என்னும் பெயர் கேவலம்கெட்டுப் போய் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம், எங்களது கொள்கை முடிவு தனித்துப் போட்டியிடுவது தான். 

அண்ணாமலை அவர்கள் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டது போல அதிமுக முன்னாள் அமைச்சர் சொத்து பட்டியலை வெளியிட்டு நடுநிலையாளராக இருக்க வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் கோடநாடு கொலை வழக்கு பற்றி பேசுவதே இல்லை. முன்னாள் முதல்வர் வீட்டில் பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் மற்றவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது குறித்து ஏன் அண்ணாமலை பேசுவதில்லை, கூட்டணி வைத்தால் அவர்கள் புனிதம் ஆகி விடுவார்களா?”  என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்தௌ பேசுகையில்,.. “ காங்கிரஸ் அப்போதைக்கு கொண்டு வந்தபோதே நீட் தேர்வை தடுத்து இருக்க வேண்டும், பிளஸ்-டூ மதிப்பெண் தேவையில்லை என்றால் நேரடியாக நீட் தேர்வு மட்டும் எழுதவிடலாமே? பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நீட் தேர்வில் வெற்றி பெற்றவரிடம் மட்டுமே மருத்துவம் செய்து கொள்வேன் என்பார்களா?  அல்லது ஏற்கனவே மருத்துவம் பார்த்து வருபவர்களிடம் சிகிச்சை பெறுவார்களா”,  என்றும் கேள்வி எழுப்பினார்.

” அதே நேரம் மற்ற மாநிலங்களில் ஏன் நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் சாவதில்லை”,  என்றார். உயிரைக் கொடுத்து சாதிக்கக்கூடாது உயிரோடு இருந்து சாதிக்க வேண்டும் அந்த நம்பிக்கையை கொடுக்க வேண்டும். 

நாடாளுமன்றத்தில் ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்தால் தமிழகத்திற்கான தேவைகளை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக போட்டியிடுகிறேன், நான் சண்டைக்காரன் என்பதால் நிச்சயம் போராடுவேன்”,  என்றார்.