திமுக வந்தாலே கோயம்புத்தூருக்கு தீய சக்திகள் பெருகிவிடும் என கோவையில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை விமா்சித்துள்ளாா்.
தமிழ்நாடு முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைப்பயணத்தை தொடங்கி பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மக்களைச் சந்தித்து வருகிறாா். அதன்படி, கோவை மாவட்டத்தில் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 4-வது நாளாக நடைப்பயணம் மேற்கொண்டாா். ராம் நகரில் உள்ள ராமா் கோயிலில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கிய அண்ணாமலைக்கு கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக வந்தாலே கோயம்புத்தூாில் தீய சக்திகள் பெருகிவிடும் எனவும், திமுக என்ற தீய சக்தியை வரும் தேர்தலில் அப்புறப்படுத்துவது நமது கடமை எனவும் தொிவித்தாா்.
இதையும் படிக்க : "பெண் சக்தியை குஜராத்தில் இருந்து மேம்படுத்துவோம்" - பிரதமர்
தொடா்ந்து பேசிய அவா், வரும் நாடாளுமன்ற தோ்தலில் தமிழ்நாட்டில் இருந்து 39 நாடாளுமன்ற உறுப்பினா்களை பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் மக்களவைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்றாா். மேலும் நரேந்திர மோடி 400 எம்பிக்களுடன் மீண்டும் பிரதமா் ஆவாா் என்று உறுதிப்பட தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக நடத்தி வரும் சாதி மற்றும் மத அரசியலை சல்லி சல்லியாக நொறுக்க வேண்டும் எனவும் கூறினாா்.