சென்னை கிழக்கு மாவட்டம் 57வது வட்ட திமுக சார்பில் திரைவானம் போற்றும் தமிழ் வானம் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் யானைகவுணி, பகுதியில் நடைபெற்றது. இதில் பலர் பங்கேற்று உரையாற்றினர்.
நடிகர் போண்டா மணி:
என்னை காப்பாற்றியது முதலமைச்சர் தான் எனவும் ஓமந்தூரார் மருத்துவமனையில் என்னை அனுமதித்து என்னை காப்பாற்றியது அவர் தான் எனவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அவர் எனவும் நடிகர் போண்டா மணி பேசியுள்ளார்.
மேலும் இலங்கை தமிழர்களை அகதிகள் என்று சொல்ல கூடாது என்று சொல்லி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றார் எனக் கூறிய போண்டா மணி இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது எனவும் இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெற மக்களாகிய உங்கள் ஆதரவு தேவை எனவும் தெரிவித்துள்ளார். அதனுடன் அடித்து கூட கேட்பார்கள் ஓட்டை மாற்றி போட்டுவிடதீர்கள் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் நடிகர் போண்டா மணி.
இயக்குநர் பாண்டியராஜன்:
கண்ணமாபேட்டையில் ஒரு நிகழ்ச்சியில் முரசே முழங்கு என்ற நாடகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், வேடமிட்டு நடித்த போது அதை தரையில் அமர்ந்து ரசித்து பார்த்ததாக கூறிய இயக்குநர் பாண்டியராஜன் கலைஞரும் அதனை தரையில் அமர்ந்து பார்த்ததாக கூறினார். மேலும் புகைப்பட கண்காட்சியை பார்த்ததாகவும் அதில் முதலமைச்சரின் வாழ்க்கை அனைத்தும் அழகாக கூறப்பட்டுள்ளது எனவும் நம் ஊரில் சைக்கிளில் போவது, நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மற்றவர்களை விசாரிப்பது போன்ற காரியங்களை செய்வது நம் முதலமைச்சர் மட்டும் தான் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாண்டிய ராஜன் பொறுமையாக இருந்தால் பூமி ஆழ முடியும் எனவும் முதலமைச்சர் பொறுத்த காரணத்தினால் தான் தற்போது ஆளுகிறார் எனவும் மிகவும் கஷ்டபட்டு வந்த பொறுமைசாலி நம் முதலமைச்சர் என்றும் கூறினார்.
நடிகர் எம் எஸ் பாஸ்கர்:
பாண்டியராஜனை தொடர்ந்து பேசிய நடிகர் எம் எஸ் பாஸ்கர் முதலமைச்சரை மிக சிறந்த உழைப்பாளி எனவும் மிகவும் சிரிக்க மாட்டார் எனவும் நாட்டை பற்றி யோசித்து கொண்டே இருப்பார் எனவும் கூறினார். மேலும் அவரை வாழ்த்தினாலும் வசைபாடினலும் அதை அவர் எடுத்து கொள்ள மாட்டார் எனவும் அன்று என்னிடம் எப்படி பேசினாரா அதே போலவே தான் இன்றும் என்னுடன் பேசுகிறார் எனவும் கூறினார்.
மேலும் வயதானாலும் அது தெரியாமல் உழைத்து கொண்டு இருப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் நம் முதலமைச்சர் பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து நல்ல திட்டங்களை பாராட்டலாம் அல்லது திட்டுவது மற்றவர்களின் குணம் என்றாலும் அவர்கள் திட்டினாலும் அவர்களுக்காகவும் உழைத்து கொண்டு இருப்பேன் என்பது தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மனம் எனவும் கூறினார் நடிகர் எம் எஸ் பாஸ்கர்.
இதையும் படிக்க: சாதியால் பிரிவினை செய்கின்ற பாஜவிற்கு துணை....!!!