தமிழ்நாடு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000..... திமுககாரர்கள் குடும்பத்துக்கு மட்டுமா?!!

மக்களுக்கு ஏமாற்றத்தை தரக்கூடிய பட்ஜெட்டாகத் தான் தற்போதைய பட்ஜெட் அமைந்துள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் எச்.ராஜா கருத்து தொிவித்துள்ளாா். 

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், திமுக என்றாலே வன்முறை கட்சி என்று அனைவருக்கும் தெரியும் என குற்றஞ்சாட்டிய அவா், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட் எனவும் கருத்து தொிவித்துள்ளாா்.  

உண்மையில்லை:

தொடா்ந்து பேசிய எச்.ராஜா தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை பதவியை ராஜினிமா செய்து விட்டாா் என்ற செய்தியில் எந்த உண்மையும் இல்லை எனவும் தொிவித்துள்ளாா். 

துடிப்பான இளைஞர்:

அதனைத் தொடர்ந்து அண்ணாமலை குறித்து பேசுகையில், அண்ணாமலை இளமையான தலைவர் எனவும் அவர் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.  மேலும் கூட்டணி குறித்து பேசுகையில் கூட்டணி என்பது கட்சியின் வளர்ச்சிக்கு தடை அல்ல என அடல் பிகாரி வாஜ்பாய்  கூறியுள்ளதாக ஹெச்.ராஜா  தெரிவித்தார். 

வன்முறைக் கட்சி:

ஹெச்.ராஜா தொடர்ந்து பேசுகையில்  திமுக என்றாலே வன்முறை கட்சி என்று அனைவருக்கும் தெரியும் எனவும் அவர்களுக்குள்ளேயே வன்முறை கலாச்சாரத்தை கையாளுகின்றனர் எனவும் கூறிய அவர் திருச்சி சிவாவால் அவரது வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை எனவும் கூறினார்.  மேலும் நேருவின் தம்பிக்கு நடந்தது போல் சிவாவுக்கும் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது எனவும்  பேசினார்.

பரிதாப நிலை:

மேலும் தமிழ்நாட்டில் ஒரு பாஜககாரர் கூட உயிரோடு இருக்க முடியாது என்று பேசிய ஆர்.எஸ்.பாரதியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று தெரியவில்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாகம், கட்சி, குடும்பம் என எதன் மீதும் கட்டுப்பாடு மாதிரியான பரிதாபகரமான நிலை எனத் தெரிவித்தார்.

பொய்யான வாக்குறுதி:

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை எனக் கூறிய அவர் தமிழக பட்ஜெட் மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட் எனவும் திமுகவுக்காக ஜாக்டோ ஜியோ உழைத்தனர், ஆனால் அவர்களின் கோரிக்கையை திமுக நிறைவேற்றவில்லை எனவும் கூறினார்.  

திமுகவிற்கு மட்டும் தானா?:

அதேபோல் மகளிர் உரிமைத் தொகைக்கு 7000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அந்தத் தொகையைக் கொண்டு 60 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே கொடுக்கலாம் எனவும்  இதுவரை அதற்கான தகுதி என்ன என்பது குறித்தும் அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.  மேலும்  அப்படி என்றால் திமுககாரர்கள் குடும்பத்துக்கு மட்டும் கொடுக்கப் போகிறார்களா? எனவும் கேள்வியெழுப்பினார்.   

எதிர்ப்பு:

இதற்கிடையில் ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  கோவில்பட்டி மந்திதோப்பு சாலை  மங்கள விநாயகர் கோவில் அருகே போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் கதிரேசன் உள்ளிட்ட 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.