தமிழ்நாடு

நீதிமன்றங்களில் அம்பேத்கா் படம் அகற்றப்படாது... முடிவை மாற்றிய உயா்நீதிமன்றம்!!

Malaimurasu Seithigal TV

நீதிமன்றங்களில் அம்பேத்கா் படம் அகற்றப்படாது எனவும், பழைய நடைமுறையே தொடரும் எனவும் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தொிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை தவிர மற்ற எவரது படங்களையும் வைக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. 

இதற்கிடையே நீதிமன்றத்தில் அம்பேத்கர் படத்தை வைக்கக் கூடாது என எப்படி கூறலாம்? என தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற வளாகங்களில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனா். 

இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை கடிதம் மூலமாக தலைமை நீதிபதியிடம் அவா் வழங்கினார்.

அரசின் நிலைப்பாட்டினை கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படங்களையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்றும், தற்போதைய நடைமுறையே தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.