நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை முதல் நல்ல வெயிலும் மதியம் முதல் கனமழையும் பெய்து வருகிறது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் மழை தோட்ட காய்கறிகளான விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கேரட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க : "புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில்" - பிரதமர் பெருமிதம்
இந்நிலையில் இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்ததையடுத்து, அவ்வப்போது மழை பெய்து வந்தது.
இதனை அடுத்து பிற்பகல் 1:30 மணி முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதகை நகரம், மத்திய பேருந்து நிலையம், பிங்கர் போஸ்ட், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.
இந்த மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குளு, குளு காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.