செவித்திறன் பாதிக்கப்பட்ட நபர்களும் சட்டப்பேரவை செயல்பாடுகளை புரிந்துகொள்ளும் வகையில் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் சைகை மொழியில் விளக்கும் புதிய நடைமுறையை இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் துறை ரீதியிலான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொகுப்பு தினசரி 10 நிமிடங்களுக்கு எடிட் செய்து வழங்கப்படுகிறது.
அவ்வாறு வழங்கப்படும் 10 நிமிட வீடியோ தொகுப்பினை 10 நிமிட சைகை மொழியில், செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் விளக்குவதை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறையில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த செயல்பாடுகள் தினமும் 10 நிமிட வீடியோ தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.
இதையும் படிக்க |டிசம்பர் மாதத்திற்குள் போரூர் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக.... அமைச்சர் எ.வ.வேலு!!!