காங்கேயம் சட்டமன்றத் தொகுதியான நால்ரோடு பகுதியில் இன்று நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் பொள்ளாச்சி ஜெயராமன். இதில் அஇஅதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மிக மோசமான திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்றார். மேலும், ஊழலில் ஈடுபடுகின்ற கட்சியாக திமுக மாறிவிட்டது என்றும், இதற்குப் பிறகும் இந்த கட்சி ஆட்சியில் அமரப்போவதில்லை என்பதைத் தெரிந்து கொண்டு தலையிலிருந்து வால் வரை அனைவரும் யாரிடத்தில் பணத்தை எப்படி பிடுங்கலாம் என்ற நோக்கத்தோடு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற நாள் வெகு விரைவில் வரும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, விவசாயிகளும் வியாபாரிகலம் திமுக ஆட்சியில் மகிச்சியாக இல்லை எனவும் தெரிவித்தார். ஒன்று இரண்டு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அதேபோல கரூரில் ஜமுக்காலத் தொழில், ஈரோட்டில் ஜவுளி தொழில் ஆகியவை நலிந்து விட்டது எனவும் கூறினார்.
அதோடு, திருப்பூரில் ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி வருமானம் வந்து கொண்டிருந்த உள்ளாடை தொழில், இன்றைக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் திருப்பூரில் வசிக்கும் மக்கள் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ழும் நிலையும் வந்திருக்கிறது எனவும் தெறிவித்தார்.
மேலும், மக்கள் மிகப்பெரிய துன்பத்தை அனுபவித்துக் கொண்டுள்ளனர். எனினும், ஆட்சியாளர்கள் இவைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னிடம் இருக்கின்ற பெரிய தொகையை எப்படி துபாய்க்கு அனுப்புவது எப்படி அதை இங்கே கணக்கில் பெறுவது என்று கணக்கிட்டு கொண்டுள்ளதாகவும்,
திமுகவிற்கு சரியான பாடம் புகட்டுகின்ற நிலைமைக்கு மக்கள் வந்துவிட்டனர் எனவும் விமர்சித்தார்..
மேலும், ஓபிஎஸ் அணியினரின் திருச்சி மாநாடு குறித்த செய்தியாளர் கேள்விக்கு,.. முடிந்து போன அத்தியாயத்தை பத்தி கேள்வி கேட்க வேண்டாம் எனவும் அனைத்திந்திய அண்ணா திமுக எடப்பாடியார் அவர்களின் தலைமையில் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது என்றும், முகவிலாசம் இல்லாதவர்களை பற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
'உப்பு தின்னா தண்ணி குடிச்சாகணும்', என ஸ்டாலின் தெரிவித்தது குறித்த கேள்விக்கு,.. "அவர்களை அவர்களே சொல்லிக் கொள்கின்றனர். உதாரணத்திற்கு, ரெட் ஜெயிண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சினிமா துறையிலும் இவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று விமர்சித்தார்.
அதோடு, தற்போதெல்லாம், யார் படம் எடுத்தாலும் யார் நடித்தாலும் கருணாநிதியின் பேரன் உதயநிதிக்கு அந்த படத்தை விற்கவில்லை என்று சொன்னால் அந்தப் படம் வெளியிடுகின்ற தியேட்டர்களில் ஓடாது என்கின்ற ஒரு மிரட்டல் சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. ரெட் ஜெயின் என்றாலே சிவப்பு பூதம் என்று அர்த்தம் அதுதான் இன்றைக்கு தமிழகத்தில் கருணாநிதி குடும்பத்தின் சொத்தும் எனவும் விமர்சித்தார்.
இதையும் படிக்க } "ஆளுமை மிக்க யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" நடிகர் விஜய் பற்றி பா.விஜய் கருத்து...!!
மேலும் அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகளில் போதிய செவிலியர்கள் மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் இரண்டு ஆண்டுகளாக புதிய மருந்துகள் கொள்முதல் செய்யவில்லை எனவும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை எனவும் காங்கேயம் மட்டும் இன்றி பொள்ளாச்சி, கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலை தொடர்வதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.