தமிழ்நாடு

தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகிகளை போலிசார் கைது

Malaimurasu Seithigal TV

விசிக மனு

திண்டிவனம் வண்டி மேடு பகுதியில் இன்று  பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பட்ஜெட் சாதனை விளக்கு பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர்  ராஜேந்திரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் எச் ராஜா மற்றும் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் சிறப்புரையாற்ற இருந்தனர்.
இதற்கிடையில் பாஜக பொதுக்கூட்டத்திற்க்கு அனுமதி அளிக்கக்கூடாது 
என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  சார்பில் அதன் மாவட்ட செயலாளர் சேரன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
 ஸ்ரீ நாதாவிடம் மனு அளித்துள்ளனர்.


 கருப்புக்கொடியும் ஆர்ப்பாட்டமும்

மேலும் எச். ராஜா வருகையை கண்டித்து விசிக  சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் நடைபெறுவதாக அறிவித்தனர்..  இதற்க்கிடையில்  பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
ஸ்ரீ நாதா அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதனால் பாஜக நிர்வாகிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பாஜகவினர் நகரத் தலைவர் வெங்கடச பெருமாள் தலைமையில் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

போலீசார் பாதுகாப்பு


இந்நிலையில் திண்டிவனம் பொதுக்கூட்டத்திற்கு சென்னையில் இருந்து கார் மூலமாக வருகை தந்த பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹீமை போலீசார் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே கைது செய்தனர்.. மே லும் பாஜகவினரை கைது செய்வதற்காக போலீசார் அரசு பேருந்துகளை பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் தயாராக  நிறுத்திவைத்தனர்.இதனால் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்று பொதுமக்களிலேயே கேள்வி எழுந்ந்தது. இதனால் திண்டிவனம் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.இந்நிலையில் மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் ஏ டி ராஜேந்திரன் தலைமையில் பொதுக்கூட்ட மேடைக்கு சென்று கூட்டம் நடத்துவதற்கு தயாரான கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்து அரசு பேருந்தில்  ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதனால் திண்டிவனம் பகுதியில் தற்பொழுது பதட்டமான சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.