மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழ்நாட்டின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரத்தில் வெறும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். மிகக் குறைந்த பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுத்துவிட்டு, அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாதனையாக பேசுவது அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.