தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இளைஞர்கள் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு தங்கள் கவலைகளை மறந்து உற்சாகமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் தனியார் அறக்கட்டளையின் சார்பில் தஞ்சை பழைய நீதிமன்றம் சாலை பகுதியில் ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் சிறுவர்களுடன் நடனம் ஆடி தொடங்கி வைத்தார். இதில் விளையாட்டு, ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு உற்சாகமாக ஆடி பாடி கொண்டாடினர்.
நிகழ்வில் நடனம் ஆடிய இளைஞர் ஒருவர் மயங்கி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நிகழ்ச்சியை காண சுவர் ஏறி குதித்ததில் சிலர் காயம் அடைந்துள்ளனர். உடனே அங்கிருந்த பெண் காவலர் அவர்களை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.