சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவர் வராததால் முதலமைச்சர் மு க ஸ்டாலினே ஜுன் 15 ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி மைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 230 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு இந்த மருத்துவமனையை கடந்த 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்காக தமிழ்நாட்டின் சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் வெளிநாட்டு பயணம் காரணமாக திறப்பு விழா ரத்து செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று ஜூன் 15 ஆம் தேதி திறந்து வைக்க தமிழ்நாடு அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், குடியரசுத் தலைவர் வருகை மீண்டும் ரத்தாகியுள்ள நிலையில், ஜூன் 15 ஆம் தேதி முதலமைச்சரே மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!