தமிழ்நாடு

"ஆளுநரின் பேச்சு திமுகவுக்கு மிகப் பெரிய விளம்பரம்" - மு.க.ஸ்டாலின்

Tamil Selvi Selvakumar

வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு திமுகவுக்கு மிகப் பெரிய விளம்பரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் திராவிட இயக்க எழுத்தாளரும், புலவருமான மா.நன்னன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 'நன்னன் குடி' நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்..  

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட மா.நன்னன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். வாழ்வின் இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்த மா.நன்னன், எழுத்தாலும், சிந்தனையாலும் என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என நெகிழ்ச்சி தெரிவித்தார். 

மேலும் தமிழ்நாடு ஆளுநர் ரவி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருவதாக குற்றம்சாட்டினார். ஆளுநர் பேசும் அரிசியல்  திமுகவுக்கு  விளம்பரமாக அமைவதாகவும்  முதலமைசசர் தெரிவித்தார். பெரியார், அண்ணா, கலைஞர் போன்று வாழ்நாள் எல்லாம் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்த மா.நன்னன் எழுதிய புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்படும் என முதலமைச்சர் கூறினார். 

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.