தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழ்....!!!

Malaimurasu Seithigal TV

ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பண்டைய இலக்கியம்:

தமிழகம் என்றே பண்டைய  இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதாகவும் மாநிலத்தை அவ்வாறே அழைக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் முன்னதாகக் கூறியது சர்ச்சையானது.

வெளியேறிய ஆளுநர்:

இதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் இருந்து முதலமைச்சர் உரையின்போது ஆளுநர் நேற்று வெளியேறினார்.

சர்ச்சை அழைப்பிதழ்:

இந்நிலையில் 12ம் தேதி மாலை நடைபெறும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அழைப்பிதழ் ஆளுநர் சார்பாக, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, சட்டப்பேரவையில் உள்ள கட்சிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

கடந்தமுறை வந்த அழைப்பிதழில்  தமிழ்நாடு ஆளுநர் என்றே கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாற்றப்பட்ட இலச்சினை:

அப்போது தமிழ்நாடு அரசின் இலச்சினை இருந்த நிலையில், இம்முறை 3 இடங்களிலும் மத்திய அரசின் இலச்சினை மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்