தமிழ்நாடு

தமிழ் நாடு ஆளுநர்: "வள்ளலாரின் வரிகள், சனாதன தர்மத்தின் எதிரொலி!"

Malaimurasu Seithigal TV

வடலூரில் நடைபெற்ற 200வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ஆளுநர் ரவி, "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்னும் வள்ளலாரின் வரிகள், சனாதன தர்மத்தின் எதிரொலி, என பேசியுள்ளார்.

வடலூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வள்ளலார் வரலாறு 200 வது ஜெயந்தி விழா, வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. தொழிலதிபர் பண்ருட்டி மோகனகிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருக்கிறார்.

அப்பொழுது, ஆளுநர் ரவி பேசியதாவது, உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்"
என்னும் வள்ளலாரின் வரிகள், சனாதன தர்மத்தின் எதிரொலி. 200 ஆண்டுகளுக்கு முன்
கார் இருளை நீக்க வந்த ஜோதி தான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையாக சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் தான் வள்ளலார், என்று பேசியுள்ளார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக வடலூர் வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் மற்றும் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் மற்றும் வடலூர் சத்தியநான சபை ஆகிய இடங்களில் வழிபாடு மேற்கொண்டார்