தமிழ்நாடு

மாணவர்களுக்கு மத்தியில் அரசியல் பேசும் ஆளுநர்...!விமர்சித்த அமைச்சர்!!

Tamil Selvi Selvakumar

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

ஆய்வுக்கூட்டம்:

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையம் அரங்கத்தில் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்வி இயக்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் குறித்த ஆய்வு கூட்டம், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு பொறியாளர்கள் அரசு துணைவேந்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு:

பின்னர் சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தை சார்ந்த பொறியில் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், வேலை வாய்ப்புகளுக்கு என்னென்ன புதியதாக செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்ற விஷயங்களை குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தார். 

அதிகரித்தது மாணவர் சேர்க்கை:

இந்த ஆண்டு அரசு பொறியியல் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கை என்பது அதிகரித்து உள்ளது. மேலும், தொழில்துறையையும் உயர்கல்வித்துறையையும் ஒருங்கிணைத்து நான் முதல்வன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்  பயன் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

அரசியலை பற்றி அதிகம் பேசும் ஆளுநர்:

தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்வித் திட்டமாக இருந்தாலும் தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்க  ஒரு குழுவை உருவாக்கி உள்ளார், அது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்த அவர், ஆளுநர் கல்லூரிகளில் கல்வியைப் பற்றி பேசுவதை விட அரசியலைப் பற்றி தான் அதிகமாக பேசுகிறார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.