செங்கல்பட்டு அருகே, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு, புலிப்பாக்கம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திட்டக்குடியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. பேருந்தை, ராம மூர்த்தி என்பவர் ஓட்டிவந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, பேருந்து, புலிப்பாக்கம் அருகே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி, அந்தரத்தில் தொங்கியபடி நின்றுள்ளது. இந்த விபத்தில் 5பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டதால் சுமார் 3கிலோ மீட்டாருக்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிக்க: "இது என் ஏரியா.. எந்த கடை-ல, என்ன வாங்குனாலும் காசு குடுக்க மாட்டேன்": மதுப்பிரியர் அட்டூழியம்!!
மேலும், விபத்தான பேருந்தை, சம்பவம் நடந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஓட்டுனர் ராமமூர்த்தி தூக்க மயக்கத்தில் வாகனத்தை இயக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.