திருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதூரில் தொல்லியல் அகழ்வாராய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆராய்ச்சி நடைபெறும் இடத்தில் தோண்டப்பட்ட 3 குழிகளில். கண்ணாடி மணிகள். சுடுமண் மணிகள். மற்றும் சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் அகழாய்வுப் பணிகள் 3-வது கட்டமாக வருகின்றன. அதற்காக கடந்த 6-ம் தேதி தொல்லியல் துறை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மூன்றாம் கட்டமாக விரிவான அகழாய்வு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு காணொளி காட்சி வாயிலாக விரிவான அகழாய்வு பணி துவக்கி வைக்கப்பட்டது. அப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க:.. ரியல் எஸ்டேட்களாக மாற்ற அனுமதிக்காமல்....உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!
கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு....
இதில் தற்போது தரை மட்டத்தில் இருந்து 40 சென்டிமீட்டர் ஆழத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கண்ணாடி மணிகள், சூடுமண் மணிகள், விளையாட்டு சில்லுகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பழைய உபகரணங்கள் கிடைத்துள்ளன. கிடைக்கப்பெற்ற பொருட்கள் குறித்து இந்த வாரத்தில் ஆய்வு செய்யும் பணி நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க;... விஜய் மக்கள் இயக்கம் சார்பில்.... அம்பேத்கார் பிறந்தநாள் கொண்டாட்டம்!!