தமிழ்நாடு

இலவச கட்டாய கல்வி...! ஏப்ரல் 20ல் மாணவர் சேர்க்கை...!!

Malaimurasu Seithigal TV

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ம் தேதி தொடங்குவதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. 

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஒன்றரை லட்சம் ஏழை குழந்தைகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2023-24 ஆம் கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இம் மாதம் 20 ம் தேதி தொடங்க உள்ளது. 

இலவச கல்வி திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதற்கான பணியினை ஏப்ரல் மாதம் 20 ம் தேதி தொடங்க இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலவச கல்வி திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கு தேவையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை முன்கூட்டியே பெற்றோர்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.