தமிழ்நாடு

"சென்னையில் நான்கு மருத்துவமனைகள் தயார்" ககன் தீப் சிங் பேடி அறிவிப்பு!

Malaimurasu Seithigal TV

ஒடிசாவில் இரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சென்னையில் உள்ள நான்கு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில் உட்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமாா் 288 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் 900-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனா். இவர்களை மீட்க தமிழ்நாடு அமைச்சர்கள் குழு ஒடிசாவிற்கு விரைந்துள்ளது. அவர்களுடன் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

இந்நிலையில் ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக சென்னை வர உள்ளவர்களுக்கு 4 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்காக, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் மட்டும் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்திலிருந்து மருத்துவக் குழுவும் ஒடிசா மாநிலத்துக்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.