தமிழ்நாடு

ஒற்றை யானை நடமாட்டம்... வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை!

Malaimurasu Seithigal TV

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலைகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புலி சிறுத்தை கரடி என எண்ணற்ற உயிரினங்கள் இருந்தாலும் இதில் யானைகளின் எண்ணிக்கையை அதிகமாக வாழ்கின்றன.

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளதால், இவ்வளியே கூட்டம் கூட்டமாக யானைகள் செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக பாகுபாலி காட்டு யானையை பிடிப்பதற்காக மேட்டுப்பாளையம் பகுதிக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு கோத்தகிரி சாலையில் உள்ள அரசு மரக்கடங்கு பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனால் காட்டு யானைகளின் நடமாட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வெகுவாக குறைந்து இருந்தது.

இந்த நிலையில் பாகுபலி யானைக்கு மருத்துவ சிகிச்சை செய்ய தேவையில்லை என்று மருத்துவர்கள் முடிவு செய்தவுடன், இரண்டு கும்கி யானைகளும் முதுமலை திருப்பி அனுப்பப்பட்டது. இதனையடுத்து தற்போது மேட்டுப்பாளையம் கோத்தகிரி  சாலையில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருகிறது

கோத்தகிரி சாலையில், முதல் கொண்டை ஊசி வளைவில் அருகே  காட்டு யானை ஒன்று, சாலையில் நடமாடி வருகிறது. வனத்தின் ஒருபுறம் இருந்து மறுபுறம் உள்ள வனத்திற்கு செல்ல சாலையை கடந்து செல்கிறது. 

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் சாலையில் யானை நடமாட்டம் மீண்டும் தொடங்கிய உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் கோத்தகிரி சாலையில் நடைபயிற்சி செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர்