நிதிப் பற்றாக்குறையை சிறப்பாகக் கையாண்டு 3 சதவீதத்திற்கு கொண்டு வந்துள்ளதாக மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பதிலளித்த மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கடன் பெறுவது ஒன்றும் பக்கெட்டில் தண்ணீர் ஊற்றுவது போல் இல்லை, மொத்த கடன் எவ்வளவு, எவ்வளவ் திருப்பி செலுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் கடன் மாறுபடும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாக பதிலளித்த பி.டி.ஆர், நீங்கள் 10 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறையை ஏன் குறைக்க முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.