தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. பட்டாசுகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 2021 மற்றும் 22-ம் ஆண்டுகளில் கூறப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தீபாவளி பண்டிகை காலங்களில், காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிக சத்தத்துடன் வெடிக்கும் சர வெடிகள், காற்று மாசு மற்றும் ஒலி மாசுக்களை ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிக்க வேண்டும் என்றும், பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள், குடிசைப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க கூடாது போன்ற விழிப்புணர்வை மாநில அரசுகள் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.