பவானி ஈரோடு பெருந்துறை ஆகிய பகுதிகளில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . சுமார் இரண்டு மணி நேரமாக போராடி வருகின்றனர் உயிர் இழப்பு ஏதும் இல்லைபல கோடி மதிப்புள்ள மஞ்சள் எரிந்து சாம்பல். ஈரோடு மாவட்டம் பெரிய புலியூர் அருகே அங்கித் அகர்வால் என்பவர் விவசாயிகளிடம் இருந்து மஞ்சள் மற்றும் மஞ்சள் பாலீஷ் போடும் போது ஏற்படும் மஞ்சள் தூள்களை வாங்கி குடோனில் இருப்பு வைத்து வட இந்தியாவிற்கு பெயிண்ட் கம்பெனி மற்றும் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்து வருகிறார்
இன்று அதிகாலை பெரிய புலியூர் பகுதிகளில் மழை பெய்தபோது குடோனில் இடி இறங்கி உள்ளது இதனால் அங்கிருந்த மஞ்சள் மூட்டைகள் தீப்பிடித்து எரிய துவங்கியது. தீ விபத்து குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயைகட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் தீ கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஈரோடு பெருந்துறை கோபி பகுதியில் இருந்து மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நகரில் ஒதுக்குபுறமான பகுதியில் குடோனை வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக மஞ்சள் பதுக்கி வைத்ததும் காப்பீடு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி இருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கவுந்தப்பாடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் பவானி ஈரோடு பெருந்துறை ஆகிய பகுதிகளில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் மூன்று மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுமார் இரண்டு மணி நேரமாக போராடி வருகின்றனர் உயிர் இழப்பு ஏதும் இல்லை பல கோடி மதிப்புள்ள மஞ்சள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.