சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்ற பெண்ணுக்கும் டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை அடுத்த தாம்பரம் முல்லை நகர் பகுதியில் சேர்ந்த ஸ்ரீவித்யா, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக சென்ற மின்சார ரயிலில் பயணித்துள்ளார்.
அப்போது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயண சீட்டு பெண் பரிசோதகர் தேன்மொழி, ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட போது, ஸ்ரீவித்யா பயண சீட்டு இல்லாமல் இருந்தார். இதனால் டிக்கெட் பரிசோதகர் தேன்மொழி,
ஸ்ரீ வித்யாவின் செல்போனை வாங்கி வைத்து கொண்டு, அபராதம் கட்டினால் செல்போனை தருவதாக கூறியதால், ஓடும் ரயிலிலேயே இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதால், சக பயணிகள் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், பெண் பயணி ஸ்ரீவித்யாவை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறக்கி, அங்குள்ள பயணசீட்டு பரிசோதகர் அறைக்கு அழைத்து சென்ற போது, செல்போனை கொடுக்கும்படி ஸ்ரீவித்யா கேட்டதால், இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றியதின் விளைவாக, கையை முறுக்கிக்கொண்டு சண்டையிட்டு உள்ளனர்.
இந்நிலையில், இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதின் காரணமாக, மாம்பழம் ரயில்வே காவல் நிலையத்தில் இருவரும் அளித்த புகாரின் பேரில், ரயில்வே போலீசார் ஸ்ரீவித்யா, தேன்மொழி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
இதையும் படிக்க | ”சொத்துவரி செலுத்தாவர்களுக்கு 1 சதவீத அபராத வட்டி விதிக்கும் திட்டம் ” - அமைச்சர் முத்துசாமி விளக்கம்