தமிழ்நாடு

விவசாயிகள் வேதனை..... பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்.... 

Malaimurasu Seithigal TV

காவிரி டெல்டா பகுதிகளில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

விவசாயிகள் வேதனை:

பருவம் தவறிப் பெய்த மழையால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதை அடுத்து விவசாயிகள் வேதனையடைந்தனர்.

கடிதம்:

இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை,  புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கொள்முதல்:

இதனால், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யவும், முதிர்ச்சியடையாத நெல்லின் வரம்பை 5 சதவீதமாக அதிகரிக்கவும் அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோரிக்கை:

சேதமடைந்த நெல்லின் வரம்பை 7 சதவீதம் வரை தளர்த்த அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.