தமிழ்நாடு

போலி பூசணிக்காய் விதையால் விவசாயி அதிர்ச்சி...!

Tamil Selvi Selvakumar

திருப்பூர் மாவட்டம் சிவன்மலை அருகே, போலி பூசணிக்காய் விதையை விற்பனை செய்த தனியார் நிறுவனத்தால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

திருப்பூரில் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பூவேந்திரன் என்பவர், இரண்டு ஏக்கர் நிலத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூசணிக்காயை விதைத்துள்ளார். 60 நாட்களில் மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், 90 நாட்கள் ஆகியும், விதை இன்னும் முளைக்காததாலும், காய்த்த ஒருசில காய்களும் சுரைக்காய் அளவு சிறிதாக இருந்ததாலும், பூவேந்திரன் ஏமாற்றம் அடைந்துள்ளார். 

புகாரின் பேரில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், பூவேந்திரனுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் என, தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.