தமிழ்நாடு

விவசாயியை அடித்தே கொன்ற போலீஸ்... தேங்கி நிற்கும் 3 பிள்ளைகள்...

வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததால் பரப்பரப்பு .

Malaimurasu Seithigal TV
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் ஏத்தாப்பூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எடப்பட்டி புதூர் பகுதியில் வசிக்கும் விவசாயி முருகேசன் (45) என்பவர்  நண்பர்களுடன் 2 இருசக்கர வாகனத்தில் கருமந்துறை சென்று விட்டு பின்பு வீடு திரும்பும்போது அங்கு போலீசார் நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 
இருவருக்கும் தகராறு ஈடுபட்டதாகவும் அப்போது ஏத்தாப்பூர் போலீஸார் சிறப்பு  காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி லத்தியால் சரமாரி தாக்கியதாகவும், படுகாயமடைந்து கருமந்துறை வாழப்பாடி நெடுஞ்சாலையில் தலையில் காயமடைந்து மயங்கி விழுந்ததாகவும் , உடனே 108 மூலமாக தும்பல் ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு எடுத்து சென்று முதலுதவி செய்து பின்னர்  ஆத்தூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர், பின்னர் மேல் சிகிக்சைக்காக சேலம் அரசு மருந்து வமனைக்கு கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் லத்தியால் தாக்கியதில் விவசாயி பலியானது  பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளருடன் இரண்டு போலீஸார் உடனிருந்துள்ளனர். இதுகுறித்து உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் ம திரண்டுள்ளனர். முருகேசனுடன் இருசக்கர வாகனத்தில்  சிவன் பாபு , ஜெயசங்கர், உடன் வந்துள்ளனர்.
முருகேசன் மனைவி அன்னக்கிளி (35), ஜெயப்பிரியா (18) ஜெயப்பிருந்தா (17) என்ற இரண்டு மகள், கவிப்பிரிய (13) ஒரு மகன் உள்ளனர்.

சேலம் மாவட்ட எஸ்பி அபிநவ் அவர்கள் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் நேரில்  மூன்று குழந்தைகளுடன் விசாரணை செய்து வருகிறார். 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு சேலம் மாவட்ட எஸ்பி அபிநவ் மாவட்ட துணை எஸ்பி பாஸ்கரன் வாழப்பாடி டிஎஸ் பி வேலுமணி ஆத்தூர் டிஎஸ்பி இம்மானுவேல் குணசேகரன் ஏத்தாப்பூர் போலீசார் வாழப்பாடி போலீசார் காரிப்பட்டி போலீசார் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.