கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அரசு பேருந்துகளில் விடுமுறை நாட்களில் மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாகர்கோயிலிலிருந்து சென்னை செல்ல 815 ரூபாயாக இருக்கும் கட்டணம் வார இறுதி விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சிறுமியை மாடு முட்டியதன் எதிரொலி : 73 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
எனவே, தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் விடுமுறை நாட்களில் மறைமுகமாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், எந்தவித முறையான அறிவிப்பும் இல்லாமல் தொலைதூரம் செல்லும் பேருந்துகளில் உயர்த்தியுள்ள கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் எனவும், தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்வது போன்று கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.