தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சர்வதேச போட்டிகளுக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி

Malaimurasu Seithigal TV

தேசிய சப் ஜூனியர் மற்றும் கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு சூடோ சங்கம் சார்பில் பிப்ரவரி 18 முதல் 21 வரை 2022-2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சப் ஜூனியர் மற்றும் கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 28 மாநிலங்களில் இருந்து சுமார் 1100 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

சாம்பியன்ஷிப்பின் போது 2500 க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்த மாணவர்கள் போட்டியிடுவார்கள். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கு பெற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர் அதன்பின்பு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் நேபாள் இடையேயான நட்பு ரீதியான சர்வதேச  கால்பந்து போட்டியை துவக்கி வைத்தார் அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது இது அதிகாரிகள் இடையே கேட்டபோது சில குறைகளை கூறியிருக்கின்றனர் அதனை விரைவில் செய்து தருவதாக தெரிவித்துள்ளேன், இருந்தாலும் இன்று நேரு விளையாட்டு அரங்கில் இந்தியா மற்றும் நேபாள்  இடையேயான சர்வதேச கால்பந்து போட்டியை காண ரசிகர்கள் பெருமளவு வரவில்லை எனவே ரசிகர்கள் சர்வதேச அளவிலான போட்டிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் ஏற்படுத்தி இருக்கிறது என தெரிவித்தார்.