தமிழ்நாடு

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழா...ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆனி திருமஞ்சன விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

Tamil Selvi Selvakumar

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன விழா, அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்று எளிமையாக கோயிலுக்கு உள்ளேயே நடந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெறுகிறது.

மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் திரளான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் கொடியேற்றம் துவங்கியது. திருவிழாவின் உத்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கோயில் கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்தார்.

இதனையொட்டி, கோயில் முன்புள்ள கொடிமரத்திற்கு பால்,தயிர்,பன்னீர், மஞ்சள் உட்பட பல்வேறு வாசன திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கொடிபட்டம்  அங்கு புடை சூழந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் சிவ சிவ கோஷத்துடன் கொடிமரத்தில் ஏற்பட்டது. 

தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா ஜூலை 5-ம் தேதி நடைபெறவுள்ளது.