தமிழ்நாடு

”ஆளுநர் கிண்டியிலிருந்து கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டி வரும்” எச்சரித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!

Malaimurasu Seithigal TV

ஆளுநர் ஆர்.என்.ரவி சரியாக தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், கிண்டியிலிருந்து கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டி வரும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எச்சரித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை நடைபயணத்திற்கு பிறகு காணமல் போவார் என்று கூறிய ஈவிகேஎஸ்,  இந்தியாவில் சாலைகள் போடும் திட்டத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் லஞ்சமாக பிரதமர் மோடி பெற்று உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து பேசியவர், டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது சரியானது என்று கூறியவர், ஆளுநர் ஆர்.என்.ரவி சரியாக தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், கிண்டியிலிருந்து கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டி வரும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எச்சரித்துள்ளார்.