தமிழ்நாடு

எம்.ஜி.ஆா் தேசிய தலைவரா? திராவிட தலைவரா?...தமிழிசை சொன்ன பதில் என்ன?

Tamil Selvi Selvakumar

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தொிவித்துள்ளாா்.

மரியாதை செலுத்திய தமிழிசை :

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆாின் 106-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தனது கணவருடன் வந்து மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.

தேசிய தலைவரா? அல்லது திராவிட தலைவரா?:

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எம்.ஜி.ஆர் தேசிய தலைவரா? அல்லது திராவிட தலைவரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், எம்.ஜி.ஆா் தேசியம் போற்றிய திராவிட தலைவா் என கூறினாா். 

தனிப்பட்ட கருத்து :

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும், ஆனால் இந்த கருத்தை ஒரு ஆளுநராக சொல்லவில்லை எனவும் கூறினார்.