தமிழ்நாடு

ஈரோடு தேர்தல்.... பரிசீலனை செய்யப்படும் வேட்பு மனுக்கள்...

Malaimurasu Seithigal TV

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. 

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் வருகின்ற 27-ம் தேதி நடைபெற உள்ளது.  இந்நிலையில், ஜனவரி 31-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.  கடந்த 7 நாட்களாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு, அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், தேமுதிகவின் ஆனந்த் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 96 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.  மனுக்களை திரும்பப் பெற வருகிற 10-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் இடைதேர்தலில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.