தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்.... விசாரணைக்கு வந்த வழக்கு!!!

Malaimurasu Seithigal TV

34 வாக்குச்சாவடி மையங்கள் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய மையங்களாக கண்டறியப்பட்டிருப்பதாகவும், அந்த தொகுதியை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் எதிர் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வெளியே அதிமுக வழக்கறிஞர் பாலமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

நடைபெற இருக்கும் ஈரோட்டுக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் குறித்து சிவி சண்முகம் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தார். குறிப்பாக அந்த மனுவில் 40 ஆயிரம் வாக்காளர்களை மிகுதியாக சேர்க்கப்பட்டு இருப்பது குறித்தும் தேர்தலில் பாதுகாப்பு கேமராக்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டிருந்தது அந்த பதில் மனுவில், 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 பூத்துகளுக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் 4000 மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அதிகப்படுத்தவும் கூறினார். 

அந்த தொகுதியில் 34 வாக்குச்சாவடி மையங்கள் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய மையங்களாக கண்டறியப்பட்டிருப்பதாகவும், அந்த தொகுதியை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் எதிர் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் உயர் நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து இரண்டு தரப்பிடமும் விசாரணை செய்த பிறகு, தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறும் என்று கேட்டறிந்து இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. மேலும் இடைத்தேர்தல் தொடர் கண்காணிப்பில் இருக்கும் எனவும் இதற்கும் மேல் வேறு ஏதேனும் முறைகேடு நடந்தால் உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்தார்.