கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த புதிய பயனாளிகள், விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதியின் அடிப்படையில் எந்த விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படவில்லை என்றும், திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தியை அடிப்படையாகக் கொண்டு இ-சேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : சனாதன ஒழிப்பு பேச்சு குறித்து உதயநிதி விளக்கமளிக்க ஆணை....!
இ சேவை மையங்களை ஒரே நேரத்தில் பயனாளிகள் அணுகுவதால் அங்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதாகவும், அவற்றை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் தகுதி வாய்ந்த புதிய பயனாளிகள், முகாம்களை தவறவிட்ட பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், சிறப்பு முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.