தேனி: கூடலூர் அருகே வாழை தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து வாழை, தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்த விலங்குகள் கடந்த சில மாதங்களாகவே கூடலூர் வெட்டுக்காடு பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் விவசாய பயிர்களை அதிக அளவில் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைந்து உள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் யானைக் கூட்டங்களை விரட்டுவதற்காக இரவு நேரம் தோட்டங்களில் காவல் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு காட்டு யானைகள் கூட்டமாக விவசாய பகுதிகளுக்கு புகுந்து வாழை மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்து அட்டகாசம் செய்து வருகின்றது.
இந்த காட்டு யானைகளை விவசாய பகுதிக்கு வராமல் அகழிகள் வெட்டி வனத்துறையினர் தடுக்க வேண்டுமென என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: அரிக்கொம்பன் யானைக்கு சிலை வைத்த விவசாயி!