தமிழ்நாடு

இரண்டு நாள் சோதனைக்கு பின் அபிராமி ராமநாதனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை!

Malaimurasu Seithigal TV

அபிராமி ராமநாதனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்ட நிலையில், அவரை நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தயாரிப்பாளரும், திரையரங்கு உரிமையாளருமான அபிராமி ராமநாதனுக்கு தொடர்புடைய இடங்களான மயிலாப்பூர், போயஸ் கார்டன், மந்தைவெளி ஆகிய பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

விடிய விடிய நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் மற்றும் நகை பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் சனிக்கிழமை காலை முதல் அபிராமி ராமநாதனை வீட்டிலிருந்து அவருடைய அலுவலகத்திற்கு வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர்.

தொர்ந்து அபிராமி ராமநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை முடித்து போயஸ்கார்டன் அலுவலகத்தில் இருந்து நுங்கம்பாக்கம் அழைத்து சென்றனர்.