தமிழ்நாடு

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனம்... ஆக.1-ல் தண்ணீர் திறக்க கோரிக்கை...

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தண்ணீர் திறக்கக் கோரி தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Malaimurasu Seithigal TV
மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதனிடையே மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி, தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.