சென்னை: சென்னை பெருநகர காவல்துறை தற்போது வரை ரூ 13.7 கோடி அபராத தொகையை வசூல் செய்துள்ளது
சென்னை போக்குவரத்து போலீசார் நிலுவையில் உள்ள மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களின் 277 வழக்குகளை முடித்து வைத்துள்ளனர். கால் சென்டர்கள் மூலம் விதிமீறலில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்டு 28.72 லட்சம் வசூலித்துள்ளனர்.
கடந்த ஐந்து மாத காலத்தில், 13,251 மது அருந்தி விதிமீறலில் ஈடுபட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ 13.7 கோடி அபராத தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று மொத்தமாக 1,81, 633 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.