தமிழ்நாடு

ஓட்டுநர்களே பொறுப்பு.... மாணவர்கள் மீது புகாரளிக்கலாம்!!

Malaimurasu Seithigal TV

பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை:

மாணவர்களை பாதுகாப்பான விதிகளை பின்பற்றச் செய்வதற்கான நிலையான இயக்க நெறிமுறைகள் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஏற்கெனவே சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுரை:

மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ பேருந்தை நிறுத்தி, படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்

புகார் அளிக்கலாம்:

ஓட்டுநர்கள், நடத்துநர்களின் அறிவுரையை மாணவர்கள் கேட்காமல் நிலைமை கட்டுப்பாட்டை மீறினால், காவல் நிலையத்துக்கோ, அவசர அழைப்பு எண்ணான 100 அல்லது மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கோ தகவல் தெரிவித்து புகார் அளிக்கலாம்.

ஓட்டுநரின் பொறுப்பு:

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு என போக்குவரத்து துறை சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.