தமிழ்நாடு

மக்களுடன் சேர்ந்து பயணிப்பது தான் திராவிட இயக்கம் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!!!

Malaimurasu Seithigal TV

தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திப்பது தான் மற்ற இயக்கங்கள்,மக்களுடன் சேர்ந்து பயணிப்பது தான் திராவிட இயக்கம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்.சென்னை இராயபேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட 10000 குடும்பங்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் சிற்றரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வேஷ்டி மற்றும் புடவை உள்பட 15 வீட்டு உபயோக பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கினர்.


தயாநிதி மாறன் மேடை பேச்சு

என்றும் சிறுபான்மையினருக்கு காவலாக உள்ள ஆட்சி திமுக ஆட்சி தான். இன்று இந்தி பேசும் மாநிலங்களில் வெற்றி பெற்று அதனை தமிழ்நாட்டில் கொண்டு வர முயற்சித்தார்கள்.ஆனால் ஒரு போதும் பெரியார்,அண்ணா பிறந்த மண்ணில் என்றும் நடக்காது

கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் முன் கொகுதியில் வந்து நின்றவர் உதயநிதி. உலகில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட போது,திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தன் தொகுதி மக்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என சிறப்பாக செயல்பட்டு இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தான் என முடித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடை பேச்சு

மோடி எப்படி ராகுல் காந்தியை பதவி இழக்க செய்தாரோ,அதேபோல் சிற்றரசு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை பதவி இழக்க செய்திருக்கிறார் என மேடையில் நகைச்சுவையாக கூறினார். தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திப்பது தான் மற்ற இயக்கங்கள்,மக்களுடன் சேர்ந்து பயணிப்பது தான் திராவிட இயக்கம் என்றும், எப்போதும் தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கும்,இஸ்லாமியர்களுக்கும் ஒத்துழைப்பது திராவிடம் தான் என்றார்

நான் முதலில் கைது செய்யப்பட்டது சிறுபான்மையினருக்கான போராட்டத்தில் தான் .முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து சிறுபான்மையினருக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் நீங்கள் எப்போது அழைத்தாலும் உங்கள் குரலுக்கான தேவையை நிறைவேற்றி கொடுக்கவே தேர்தலில் எங்களை வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளீர்கள்.திராவிடம் அதற்காக என்றும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.