தமிழ்நாடு

"தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக நீட் தேர்வு முறை" டாக்டர் எழிலன் குற்றச்சாட்டு!

Malaimurasu Seithigal TV

மருத்துவ முதுகலை படிப்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜீரோ சதவீதம் முறை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமானது என திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், திட்டக்குழு உறுப்பினருமான மருத்துவர் எழிலன். முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 200 கேள்விகள் 800 மதிப்பெண்கள் என ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் அளிக்கப்பட்டு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் மைனஸ் மதிப்பெண்ணாக எடுத்து கொள்ளப்படும்.

முதல் நிலை மருத்துவ நீட் தேர்வில் மத்திய அரசு 0 சதவீத முறையை கொண்டு வந்த பிறகு 0 சதவீதம் பெற்றவரும் மருத்துவராகலாம் என்பது மட்டுமின்றி அந்தத் தேர்வில் மைனஸ் 200 மதிப்பெண் பெற்றால் கூட மருத்துவராகலாம் என இந்தியா மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள 4000 மருத்துவர் காலி இடங்களை சரிசெய்ய இது போன்ற முதுகலை நீட் தேர்வு மதிப்பெண்ணில் ஜீரோ சதவீதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

1,20,000 மருத்துவ இடங்கள் காலி இடம் இருப்பதாக தெரிவிப்பதே பொய் 65,000 இடங்கள் மட்டுமே காலி இடமாக உள்ளது. மத்திய அரசின் இந்த 0 சதவீத மதிப்பெண் என்பது மருத்துவ கட்டமைப்பு முறைக்கு எதிராக உள்ளது. நீட் தேர்வு என்பது மருத்துவ கட்டமைப்புக்கான பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

0 சதவீகிம் என்று சொன்னதும் முகவர்களை வைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ இடங்களை வசதி படைத்த மருத்துவர்கள் பதிவு செய்து உள்ளனர். தமிழக அரசை பொருத்தவரை நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்திலும் சட்டமன்றம் வாயிலாகவும் சட்டபோராட்டம் தொடரும் என தெரிவித்தார். 

மருத்துவ படிப்பில் நீட் தேர்வை பொருத்தவரை இளங்கலை முதுகலை என இரண்டுமே தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாகவும், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் விளிம்பு  நிலை மருத்துவர்கள் வருவதை தடுக்கிறது எனவும் தெரிவித்தார்.