நாளை முதல் அரசு பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறவேண்டாம் என பேருந்து நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த மே மாதம் ரிசா்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது. மேலும் செப்டம்பா் 30-ம் தேதி வரை பொதுமக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தொிவித்திருந்தது.
இதையும் படிக்க : "400 எம்பிக்களுடன் மோடி மீண்டும் பிரதமா் ஆவாா்" - அண்ணாமலை
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அளித்த கால அவகாசம் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில், நாளை முதலே அரசு பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறவேண்டாம் என நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.