டாஸ்மாக் நிறுவனங்கள் மூலம் திமுகவின் முக்கிய புள்ளிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி வருவதாக மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை வரைமுறைப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார். 3 ஆண்டுகளில் டாஸ்மாக் எண்ணிக்கைகளை குறைப்பதன் மூலம், மதுவுக்கு அடிமையானவர்களை காப்பாற்ற முடியும் என்றார்.
இதையும் படிக்க : ரூ.50 லட்சம் மதிப்பிலான...550 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்...!
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அடுத்த பத்து நாட்களில் டாஸ்மாக் கடைகளை குறைப்பது குறித்து பா.ஜ.க. சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளதாக தெரிவித்தார். மேலும், திமுகவின் முக்கிய புள்ளிகள் நடத்தும் டாஸ்மாக் நிறுவனங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதால், டாஸ்மாக்கை மூட முடியாத நிலையில் திமுக அரசு உள்ளதாக தெரிவித்தார்.