அதிமுக ஆட்சிக்காலத்தில் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் திமுக ஆட்சியில் பெண்கள் நடமாட முடியாத சூழல் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க வந்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண்கள் பாதுகாப்பு திட்டம், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாக கூறினார். ஆனால் பின்னர் வந்த திமுக அரசு, அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பெண்கள் பாதுகாப்பான நிலையில் இருந்ததாகவும் திமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் நிலவுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிக்க: பதவியை தவறாக பயன்படுத்திய ஊராட்சி ஒன்றிய தலைவர்....!!!